பாதுகாப்பு அமைச்சகம்

தில்லி ஐ.ஐ.டி.யில் ஐடெக்ஸ் குழுவினருடன் அமெரிக்க தூதுக்குழு ஆலோசனை நடத்தியது. ஐடிஇஎக்ஸ் வெற்றியாளர்கள் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப்கள் அதிநவீன இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துகின்றன

Posted On: 18 SEP 2023 5:24PM by PIB Chennai

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (ஆராய்ச்சி மற்றும் பொறியியல்) துணை அமைச்சர்  திருமதி ஹெய்டி ஷ்யூ தலைமையிலான தூதுக்குழு செப்டம்பர் 18, 2023 அன்று தில்லி ஐஐடியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உயர் சிறப்பு மற்றும் -பாதுகாப்புத்துறை கண்டுபிடிப்புகள் அமைப்பின் (ஐடிஇஎக்ஸ்-டிஐஓ)   குழுவை சந்தித்தது. பாதுகாப்புத் தொழில்கள் உற்பத்திப்பிரிவின் இணைச் செயலாளரும், பாதுகாப்புத்துறை கண்டுபிடிப்புகள் அமைப்பின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அனுராக் பாஜ்பாய், ஐடிஇஎக்ஸ் குறித்த கண்ணோட்டத்தை அமெரிக்க தூதுக்குழுவிடம் விவரித்தார், இந்த முன்முயற்சி இந்தியாவில் பாதுகாப்பு கண்டுபிடிப்பு சூழல் அமைப்பில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்துகிறது என்பதை  அவர் விளக்கினார். செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா தீர்வுகள், டொமைன் விழிப்புணர்வு, தகவல்தொடர்புகள், விண்வெளி, சைபர் பாதுகாப்பு போன்ற முக்கியமான களங்களில் ஐடிஇஎக்ஸ் எவ்வாறு புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.  

இந்தியாவில் ஸ்டார்ட் அப் வெளிப்பாடு, ஐடிஇஎக்ஸ் திட்டம் மற்றும் பங்குதாரர்கள் பாதுகாப்பு கண்டுபிடிப்பு சூழல் அமைப்பில் புரட்சியை ஏற்படுத்திய விதம் குறித்து திருமதி ஹெய்டி ஷ்யூ பாராட்டினார். இண்டஸ்-எக்ஸ்-ன் ஒத்துழைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கும் விரைவான முன்னேற்றங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார், மேலும் இண்டஸ்-எக்ஸ்-ன் கீழ் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்வது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று  அவர் யோசனை தெரிவித்தார்.

 

***

ANU/SM/SMB/AG/KPG



(Release ID: 1958589) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Hindi