பிரதமர் அலுவலகம்
ஹைதராபாத் விடுதலை நாள் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம்: பிரதமர்
प्रविष्टि तिथि:
17 SEP 2023 8:18PM by PIB Chennai
ஹைதராபாத் விடுதலை நாள் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
ஹைதராபாத்தை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் பங்கு முன்மாதிரியாக இருந்தது என்றும் திரு. மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஹைதராபாத் விடுதலை தினத்தைக் கொண்டாடுவது குறித்து மத்தியக் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டியின் சமூக ஊடக எக்ஸ் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் விடுதலை தினம் நம் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. இன்று, ஹைதராபாத்தில் நிலவும் ஒற்றுமை உணர்வையும், நாட்டின் ஒற்றுமைக்காக செய்த தியாகங்களையும் நாம் பெருமையுடன் நினைவு கூர்கிறோம். ஹைதராபாத்தை இணைப்பதில் முன்மாதிரியான பங்காற்றிய சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
*******
AD/ANU/PKV/KRS
(रिलीज़ आईडी: 1958323)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam