நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இயக்கத்தின் கீழ் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஏற்பாடு

Posted On: 15 SEP 2023 6:52PM by PIB Chennai

தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியாவை உருவாக்குவதற்கான மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதற்காக பிரதமரால் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கியமான முதன்மை திட்டமான தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், நாடாளுமன்ற விவகாரங்கள்  அமைச்சகம்  தூய்மை மற்றும் பதிவேடு மேலாண்மைக்கு  முக்கிய கவனம்  செலுத்துகிறது.    

அமைச்சகத்தின்  தூய்மையை உறுதி செய்வதற்காக  தூய்மை இயக்கத்தின்  கீழ் அமைச்சகத்தின் மூத்த  அதிகாரிகளால்  வழக்கமான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன

அமைச்சகத்தின் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்க தூய்மை இயக்கங்களை தவறாமல் மேற்கொள்கின்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நிலுவையில் உள்ள குறிப்புகளைக்  குறைத்தல், சிறந்த பதிவு மேலாண்மை   மற்றும்  தூய்மையைப் பராமரித்தல்  ஆகியவை  சிறப்பு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், அமைச்சகம் நவம்பர், 2022 முதல் ஆகஸ்ட், 2023  வரை  சிறப்பாக செயல்பட்டு நிலுவைகளைக் குறைத்துள்ளது.

இக்காலகட்டத்தில் 153 கோப்புகள்  அறிவியல் பாதுகாப்பிற்காக இந்திய தேசிய ஆவணக்காப்பகத்திற்கு மாற்றப்பட்டு, பழைய மற்றும் காலாவதியான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.67,900/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

**********

AD/ANU/PKV/KRS


(Release ID: 1957896) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Hindi