அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் -ன் ஒரு வாரம் ஒரு ஆய்வகத் திட்டத்தின் கீழ் மாணவர்-அறிவியல் இணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

Posted On: 15 SEP 2023 10:57AM by PIB Chennai

மத்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர்-ன் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தகவல் தொடர்பு  மற்றும் கொள்கை ஆய்வு நிறுவனம் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) ஒரு வாரம் ஒரு ஆய்வக திட்டத்தைக் கடைப்பிடித்தது.  இதன் ஒரு பகுதியாக 13.09.2023 அன்று புதுதில்லியில் மாணவர்-அறிவியல் இணைப்பு திட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் ஜிக்யாசா பயிற்சி மற்றும் மனிதவளப் பிரிவின் தலைவர் திரு சி.பி.சிங் இந்த திட்டம் குறித்த ஒரு விளக்கத்தை வழங்கினார். சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால்  அறிமுக உரை வழங்கினார். இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கருப்பொருள்களான சிறுதானியங்கள் மற்றும் இந்திய பாரம்பரிய அறிவு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

2022-2023 ஆண்டுக்கான ஜிக்யாசா என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் வின் வருடாந்திர அறிக்கையும் விழாவில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய, சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுமன் ரே, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய சமையல் குறிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

*****

 

ANU/SM/PLM/RS/GK


(Release ID: 1957746)
Read this release in: English , Urdu , Hindi , Telugu