கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலுவையில் உள்ள விவகாரங்களை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் மற்றும் தூய்மை இயக்கம் 3.0-ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சகம் நடத்தியது

प्रविष्टि तिथि: 13 SEP 2023 5:25PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சகம் தூய்மையான மற்றும் மிகவும் திறன்மிக்க நாளை என்ற இலக்குகளை நோக்கி முழுமையாக உறுதிபூண்டுள்ளது மற்றும் அவற்றை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர், 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை தூய்மை இயக்கம் 2.0 -ன் போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வ அமைச்சகம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது.

 

411 பொது மக்களின் குறைகளில் 340 குறைகளுக்கு அமைச்சகம் தீர்வு கண்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், நிலையானதாகவும் மாற்றும் 456 தூய்மை பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தது; சுமார் 12425 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை இயக்கம் ₹ 25,46,76,157 வருவாயையும் ஈட்டியுள்ளது. இதில், 62 ஆயிரத்து, 612 பழைய கோப்புகள் கண்டறியப்பட்டு, களையெடுக்கப்பட்டுள்ளன.

***

ANU/AP/IR/AG/KRS


(रिलीज़ आईडी: 1957137) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu