குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில், புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்து குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

Posted On: 13 SEP 2023 3:37PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்!

 

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளதுது அற்புதமாக செயல்பட்டுள்ளதை  நான் காண்கிறேன்.

 

இந்த சந்தர்ப்பம் உண்மையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. நான் இந்த வளாகத்தை சுற்றிப் பார்த்தபோது, இதன் வசதி இங்கு அனைத்தும் உள்ளதை அறிந்துகொண்டேன். இந்த நிறுவனம் இப்போது பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது.  

 

 

இந்தியா வரலாற்றின் முக்கியத் தருணத்தில் உள்ளது. இந்த தருணத்தில் உங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். நான் எனது அரசியல் பயணத்தை 1989-ல் ஆண்டில் தொடங்கினேன். நான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சராகவும் இருந்தேன்.  ஆனால் அப்போது  நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு பில்லியனுக்கும் குறைவாக இருந்தது.. இப்போது அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இதை அனைவரும் கவனிக்க வேண்டும். இது ஒரு சாதனை.

 

பிரேசில், துருக்கி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைப் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்த நாடுகளின் பொருளாதாரம் பின்தங்கியிருந்தது. பலவீனமான ஐந்து நாடுகளின் வரிசையில் இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. விரைவில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம்.

 

நாட்டில் டிஜிட்டல் மேம்பாடு வேகமாக உள்ளது. நமது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டு உலகம் வியக்கிறது. எல்லா சேவைகள் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு முன்பு நீண்ட வரிசைகள் இருந்தன.  அதற்காக முன்பு விடுப்பு எடுக்க வேண்டிய நிலையும் இருந்தது. இப்போது பெரிய மாற்றம் வந்துள்ளது.  அனைத்து சேவைகள், கட்டணம் செலுத்துதல் மற்றும் பணப்பரிமாற்றம்  டிஜிட்டல் முறையில்  நடைபெறுகிறது.

 

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை விட நான்கு மடங்கு அதிகமாக நாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளோம்.  மொபைல் போன்கள் மற்றும் கணினிகளின் பயன்பாடுகளை பொறுத்த வரையில் நமது நாட்டில் தனிநபர் தரவு பயன்பாடு அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகமாக உள்ளது. இது போன்ற விஷயங்களை நீங்கள் உலக நாடுகளுக்கு  எடுத்துச் சொல்ல வேண்டும்.   நாட்டைப்பற்றிய தவறான தகவல்களை தடுக்க வேண்டும்.  உணவு தானிய விநியோகத்தைப் பொறுத்தவரை  ஏப்ரல் 1, 2020 முதல், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளைப் பெறுகிறார்கள்.  இது தொடர்கிறது என்பதை நீங்கள் உலகிற்கு சொல்ல வேண்டும்.

 

கொவிட் தடுப்பூசிகளின் சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மற்ற எல்லா நாடுகளிலும் அவை காகித வடிவில் உள்ளன. கற்பனை செய்து பாருங்கள்இதுமாபெரும் சாதனை!

 

உலக வங்கி தலைவர் திரு அஜய் பங்கா கூறுகையில், பிரதமரின் தொலைநோக்கு பார்வை மிகச் சிறப்பாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்தியா வெறும் ஆறு ஆண்டுகளில் அனைவருக்கும்  நிதி சேவை தொடர்பான  இலக்குகளை எட்டியுள்ளது. இது போன்ற சாதனைக்கு குறைந்தது நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகும் என உலக வங்கித்தலைவர் கூறியிருந்தார். உலக வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொல்லும் ஒவ்வொரு பொறுப்புணர்வு உண்டு. அவர் நம் நாட்டை பாராட்டுகிறார்.

 

ஜி 20 ஐ பொறுத்தவரை ஆப்பிரிக்க யூனியன் அதன் ஒரு பகுதியாக இருப்பது ஒரு வரலாற்று வளர்ச்சியாகும். இது மிகப் பெரிய சாதனையாகும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ஆப்பிரிக்க யூனியன் ஒரு முக்கியமான பங்குதாரர் என்று தெரிவித்திருந்தார்.  ஆனால் யாரும் முன்முயற்சி எடுக்கவில்லை.  அதை  இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

 

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரு கருத்தாக்கம் ஆகும். சிலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். சிலர் அதை எதிர்க்கலாம். ஆனால் அதுபற்றி விவாதிக்கவே மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல. உரையாடல் மற்றும் விவாதத்திலிருந்து நாம் விலகிச் செல்லும்போது, ஜனநாயக விழுமியங்கள் வீழ்ச்சியடைகின்றன.  மாநிலங்களவைக்கு தலைமை தாங்குவதில் முழுமையாக நான் மகிழ்ச்சியடையவில்லை.  அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காத நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து ஆழமான பகுப்பாய்வில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் நாம் ஒரு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.

 

மிக்க ன்றி. 

=======

 

 (Release ID: 1956926)

AP/ANU/PLM/RS/KRS


(Release ID: 1957130)
Read this release in: English , Urdu , Manipuri