மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளத் துறை சார்பில் தூய்மை மற்றும் நல்லாட்சிக்கான சிறப்பு முகாம் 2.0

Posted On: 12 SEP 2023 6:09PM by PIB Chennai

பதிவு மேலாண்மை, தூய்மை (உட்புற மற்றும் வெளிப்புறம்) மற்றும் அலுவலக குப்பைகளை அகற்றுதல், விதிகள் / செயல்முறைகளை எளிதாக்குதல் மற்றும் இடவசதியை விடுவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு சிறப்பு முகாம் 2.0 ஏற்பாடு செய்யப்பட்டது. மீன்வளத் துறை, அதன் தன்னாட்சி அமைப்புகளான கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் (சிஏஏ) மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (என்எஃப்டிபி) மற்றும் அதன் நிறுவனங்களான தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (நிஃப்பாட்) ஆகியவற்றால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

மீன்வளத்துறை  மற்றும் அனைத்து சார்நிலை அதிகாரிகளின் அலுவலகங்கள் இணைந்து பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக இந்த பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனமத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் 21அக்டோபர் 2022 அன்று சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்களில் இரண்டு இடங்களை பார்வையிட்டு, முன்னேற்றத்தை முழுமையாக ஆய்வு செய்தார்மீன்வளத் துறை செயலாளர் 20 அக்டோபர் 2022 அன்று விசாகப்பட்டினத்தில் மூன்று இடங்களுக்குச் சென்று எஃப்.எஸ். மற்றும் சிஃப்நெட் மண்டல அலுவலகங்களின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை ஆய்வு செய்தார்.

மீன்வளத் துறை, டி..ஆர்.பி.ஜி, தூய்மை இயக்கம் 2.0 போன்றவற்றை டேக் செய்து சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட உயர் தெளிவுத்திறன் புகைப்படங்கள் / வீடியோக்கள் மூலம் பிரச்சாரத்தின் முன்னேற்றம் "முன்னும் பின்னும்" ஆவணப்படுத்தப்பட்டது.

"சிறப்பு இயக்கம் 2.0" முடிவடைந்த நிலையில், அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பு முயற்சியால், 250 கோப்புகளை மறுஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 550 க்கும் மேற்பட்ட கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டன. சுமார் 77 மின் கோப்புகள் மறுஆய்வுக்கு விடப்பட்டனமீன்வளத் துறையில் பிரச்சாரம் காரணமாக 250 சதுர அடிக்கும் அதிகமான இடமும் விடுவிக்கப்பட்டது.

 

*****

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956679

 

AD/PKV/KRS



(Release ID: 1956769) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi , Telugu