சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையால் உலக இயன்முறை மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது
Posted On:
12 SEP 2023 4:53PM by PIB Chennai
1951-ல் இயன்முறை மருத்துவம் பரவலானதை குறிக்கும் வகையில், 1996 முதல் செப்டம்பர் 8-ந் தேதி உலக இயன்முறை மருத்துவ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிக்கலான உடற்கூறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் இந்தத் துறையில் பணியாற்றும் அனைத்து இயன்முறை மருத்துவர்களுக்கு புகழ் சேர்ப்பதாகவும், அவர்களின் சேவைகளை பாராட்டுவதாகவும் இந்த நாள் அமைகிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருளாக இருப்பது கீல்வாதத்திற்கான இயன்முறை மருத்துவமாகும்.
இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 60க்கும் அதிகமான இடங்களில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உலக இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இயன்முறை மருத்துவ அமர்வுகள், யோகா பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்குகள், இணையவழி கருத்தரங்குகள், வீதி நாடகம் போன்றவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.
***
(Release ID: 1956645)
ANU/AP/SMB/AG/KRS
(Release ID: 1956729)
Visitor Counter : 120