ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2023 செப்டம்பர் 14 அன்று அணைப் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 12 SEP 2023 3:16PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை, 2023 செப்டம்பர் 14 முதல் 15 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் அணை பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. "பாதுகாப்பான அணைகள் நாட்டின் செழிப்பை உறுதி செய்கின்றன" என்ற கருப்பொருளில் நடைபெறும் சர்வதேச மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அணைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டின் சுமார் பதினைந்து நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 6,000-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. பெரிய அணைகளின் அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டில் உள்ள  அணைகளில் சுமார் 80 சதவீதம்  25 ஆண்டுகளை கடந்தவை. 234 அணைகள் நூற்றாண்டைத் தாண்டியுள்ளன. அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது. இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஒன்றிணைந்து அணைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க  முடிவு செய்து அதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது

ல்வேறு  தகவல் அமர்வுகள்,  வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் அணைகள் தொடர்பான தகவல்கள், அனுபவம், தொழில்நுட்பங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெறும்.

கி.பி. 2-ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட முதல் அணையான கல்லணை அணையில் இருந்து, இந்தியா தற்போது 6,000-க்கும் மேற்பட்ட அணைகளைக் கொண்டுள்ளது. இது பெரிய அணைகளின் அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது. இத்தகைய வளமான வரலாற்றுப் பின்னணியில், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு அணுகுமுறையின் கீழ், அணை பாதுகாப்புச் சட்டம் - 2021 இயற்றப்பட்டது. அணைகளைப் பாதுகாப்பதில் நமது நாட்டின் அர்ப்பணிப்பை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த முற்போக்கான சட்டம் அணை கண்காணிப்பு, ஆய்வு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் நாட்டின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இது உலகளாவிய அணை பாதுகாப்பு தரங்களுக்கு ஒரு அளவுகோலை அமைக்கிறது.

***

AP/ANU/PLM/RS/GK
 


(Release ID: 1956651) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi , Telugu