ஜல்சக்தி அமைச்சகம்
சிறப்புத் தூய்மை இயக்கத்தின் கீழ் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் சார்பாக தூய்மைப் பிரச்சாரங்கள் தீவிரம்
Posted On:
12 SEP 2023 10:11AM by PIB Chennai
நவம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் அலுவலகங்களில் தூய்மை இயக்கத்தை மையமாகக் கொண்டு சிறப்புத் தூய்மை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், தூய்மை, விதிகள் மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்தல் மற்றும் எளிமைப்படுத்துதல், பதிவேடு மேலாண்மை முறையை மறுஆய்வு செய்தல், இடத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துதல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையால் இந்த சிறப்பு பிரச்சாரம் பல நகரங்களில் உத்வேகம் பெற்றுள்ளன. பிரச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து செயலாளர் மட்டத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், பிரச்சாரத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
பல நகரங்களில் துறைகள் மற்றும் அதன் அமைப்புகள் செய்த பணிகளை எடுத்துக்காட்டும் வகையில் படங்கள், காணொளிகள் உள்ளிட்ட தரவுகள் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. இத்துறையின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ., வாப்கோஸ் லிமிடெட், முழு உற்சாகத்துடன் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. குப்பைகளைக் கண்டறிந்து, அகற்றி, ஏலம் விடவும், தேவையற்ற கோப்புகளை களையெடுக்கவும், சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தூய்மைக்கு முந்தைய மற்றும் பிந்தைய இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டன. துறையின் துணை அமைப்பான ஃபராக்கா தடுப்பணை திட்டம் (எஃப்.பி.பி), அதன் நிர்வாக கட்டிடத்திற்கு அருகில், களைகள் நிறைந்த ஒரு பரந்த பயனற்ற நிலத்தை ஒரு அழகான பொழுதுபோக்கு இடமாக மாற்றியது. ஃபராக்கா தடுப்பணைக்கு அருகிலுள்ள அதன் வளர்ந்து வரும் இடத்தில் (ஹெட் ரெகுலேட்டர்) ஃபீடர் கால்வாயின் இருபுறமும் அழகான தோட்டங்களை உருவாக்குவதன் மூலமும், நிலத்தில் இருந்து களைகளை அகற்றுவதன் மூலமும் ஒரு சுற்றுலா இடமாக மாற்றியது. மேலும், குப்பைகள், வாகனங்கள், பழைய இயந்திரங்கள் போன்றவற்றை கண்டறிந்து அகற்றி, பழைய கோப்புகளை ஆய்வு செய்து களையெடுத்து, கணிசமான இடத்தை மிச்சப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956500
***
ANU/AP/BR/AG
(Release ID: 1956533)
Visitor Counter : 106