அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
துர்காபூரில் உள்ள சிஆர்டிஹெச்-மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎம்இஆர்ஐ) ஏற்பாடு செய்துள்ள சிந்தனை அமர்வு நாளை நடைபெறுகிறது
Posted On:
11 SEP 2023 4:25PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (டி.எஸ்.ஐ.ஆர்) சி.ஆர்.டி.டி.எச் மற்றும் எம்.எஸ்.எம்.இ.க்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள 18 சி.ஆர்.டி.டி.எச்.கள் குறித்த சிந்தனை அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடரில் இரண்டு சிந்தனை அமர்வுகள் இந்திய தொழில்நுட்ப கழகம், கரக்பூர் (ஐஐடி காரக்பூர்) மற்றும் லக்னோவில் உள்ள இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐடிஆர்) ஆகியவற்றில் உள்ள டி.எஸ்.ஐ.ஆர்-சி.ஆர்.டி.டி.எச் வசதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது சிந்தனை அமர்வு துர்காபூரில் உள்ள மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எம்.இ.ஆர்.ஐ) டி.எஸ்.ஐ.ஆருடன் இணைந்து நடத்தப்படும்.
துர்காபூரின் சி.எம்.இ.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் நரேஷ் சந்திர முர்முவின் கருத்து மற்றும் டி.எஸ்.ஐ.ஆரின் விஞ்ஞானி மற்றும் சி.ஆர்.டி.டி.எச் தலைவர் டாக்டர் சுஜாதா சக்லனோபிஸின் சிந்தனை அமர்வு பற்றிய கண்ணோட்டத்துடன் இந்த நிகழ்வு தொடங்கும். துர்காபூரில் உள்ள டி.எஸ்.ஐ.ஆர்-சி.ஆர்.டி.எச்-சி.எம்.இ.ஆர்.ஐ.யில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்ட ஒரு வீடியோவை டாக்டர் சுஜாதா சக்லானோபிஸ் மற்றும் டாக்டர் நரேஷ் சந்திர முர்மு ஆகியோர் விழாவில் வெளியிடுவார்கள். டி.எஸ்.ஐ.ஆரின் மூத்த அதிகாரிகள் டாக்டர் ரஞ்சித் பைரவா மற்றும் டாக்டர் சுமன் மஜும்தார், பி.ஐ-சி.ஆர்.டி.டி.எச் டாக்டர் சுதீப் சமந்தா, சி.ஆர்.டி.டி.எச்-சி.எம்.ஆர்.ஐ ஒருங்கிணைப்பாளர் திரு எஸ்.ஒய்.பூஜார் மற்றும் அவர்களின் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இந்த முக்கிய நிகழ்வில் வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.
எம்.எஸ்.எம்.இ / ஸ்டார்ட்அப்கள் / கண்டுபிடிப்பாளர்கள், தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் டி.எஸ்.ஐ.ஆர்-சி.ஆர்.டி.டி.எச்-சி.எம்.இ.ஆர்.ஐ குழுவினருடன் இந்த சிந்தனை அமர்வு ஒரு கலந்துரையாடல் அமர்வாக இருக்கும். இது இந்தியாவை ஒரு குறிப்பிடத்தக்க தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான ஒரு படியாகும்.
***
AD/PKV/GK
(Release ID: 1956391)
Visitor Counter : 141