பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு வரலாற்று சாதனையாக, ஜி 20 புதுதில்லி பிரகடனத்தில், காந்திநகரில் நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவ அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது
பிரேசில்-லின் ஜி 20 தலைமைத்துவத்தின்போது பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த பணிக்குழுவை உருவாக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
'பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்' ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பு, உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது.
Posted On:
10 SEP 2023 8:40PM by PIB Chennai
இந்திய தலைமைத்துவத்தின் கீழ் அமைந்த ஜி 20-ல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களின் சக்தி கொண்டாடப்பட்டது. இது அமிர்த காலத்தை நோக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை ஆகும். இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் முதல் முறையாக பெண்கள் மேம்பாட்டில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்ற கொள்கையில் கவனம் செலுத்தியுள்ளது.
பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான ஒரு வரலாற்று சாதனையாக, ஜி 20 புதுதில்லி பிரகடனத்தில், காந்திநகரில் 2023 ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவ அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
ஜி 20 புதுதில்லி பிரகடனம்- 2023 'பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளித்தலை மேம்படுத்துதல்', 'பெண்களின் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வைப் பாதுகாத்தல்' உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது.
மிக முக்கியமாக, பிரேசில் நாட்டின் ஜி 20 தலைமைத்துவத்தின்போது பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த ஒரு பணிக்குழுவை உருவாக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஜி 20 தலைவர்களின் இந்த செயல்பாடு, உண்மையில் பாலின சமத்துவத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும்.
'பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்' ஆகியவற்றில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இப்போது உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரிய குடியரசு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற ஜி 20 நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தீவிர செயல்பாடுகள் மற்றும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.
மகளிர் 20 மற்றும் ஜி 20 எம்பவர் (அதிகாரமளித்தல்) ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள், அறிவுசார் அமைப்புகள், எஃப்.ஐ.சி.சி.ஐ, சி.ஐ.ஐ மற்றும் பிற அமைப்புகளின் முயற்சிகளுக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பாராட்டுத் தெரிவிக்கிறது.
***
ANU/SM/PLM/DL
(Release ID: 1956183)
Visitor Counter : 327