பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டாவது ஏசிடிசிஎம் வெடிமருந்து கொண்டு செல்லும் படகு ஒப்படைக்கப்பட்டது

Posted On: 07 SEP 2023 11:21AM by PIB Chennai

மத்திய அரசின் "தற்சார்பு இந்தியா" முன்முயற்சிகளுக்கு இணங்க, தானேயில் உள்ள சூரியதீப்தா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் பதினொரு வெடிமருந்து படகுகளின் கட்டுமானம் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எல்.எஸ்.ஏ.எம் 16 (யார்டு 126) தொடரின் இரண்டாவது தொகுதி படகு செப்டம்பர் 23 அன்று சி.எம்.டி.இ எம்.வி ராஜ்கிருஷ்ணா முன்னிலையில் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. இந்தியக் கப்பல் பதிவேட்டின் (ஐ.ஆர்.எஸ்) வகைப்படுத்தல் விதிகளின் கீழ் 30 ஆண்டுகள் சேவை ஆயுள் கொண்ட படகு கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து முக்கிய மற்றும் துணை உபகரணங்கள் / அமைப்புகளுடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் "மேக் இன் இந்தியா" முன்முயற்சிகளில் இந்தப் படகு பெருமை கொள்கிறது.

ஏ.சி.டி.சி.எம் படகை சேர்ப்பது, படகுத்துறைகள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களில் ஐ.என்.எஸ். கப்பல்களுக்கு பொருட்கள் / வெடிமருந்துகளை கொண்டு செல்லுதல், புறப்படுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் ஐ.என்.எஸ்- இன் செயல்பாட்டு கடமைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

***

ANU/AD/PKV/AG/KPG


(Release ID: 1955417) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Hindi , Telugu