எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொடர் கட்டமைப்பு ஆகியவற்றுக்கான நாடுகடந்த கிரிட் இணைப்புகள் பற்றிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 06 SEP 2023 6:30PM by PIB Chennai

 18வது ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மிந்தொடர் கட்டமைப்பு (OSOWOG) என்பதற்கான நாடுகடந்த கிரிட் இணைப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாடு இன்று புது தில்லியில் நடைபெற்றது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மஹாரத்னா' நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (POWERGRID) மூலம் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

மாநாட்டில் உரையாற்றிய மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங்,  இந்தியா ஏற்கனவே தனது அண்டை நாடுகளுடன் எல்லை தாண்டிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு எல்லைகடந்த நாடுகளுக்கிடையே இணைப்புகளை வலுப்படுத்தும் செயல்முறையில் இருப்பதாகவும் கூறினார்.

 

“ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தோடர் கட்டமைப்பு என்பது அனைத்து நாடுகளும் சூரியனில் இருந்து ஆற்றலின் பலனைப் பெற உதவும்.  இது இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது, குறிப்பாக நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறும்போது. இது 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மிகவும் மலிவானதாக மாற்றும். இது இருப்புத் தேவையையும் குறைக்கும். இதனால் பொது மக்களுக்கான மின்சாரச் செலவைக் குறைப்பதுடன், ஆற்றல் மாற்றத்திற்கும் இது உதவும்," என்றும் அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் குறிப்பிட்டார். 

 

 

மேலும் பேசிய அமைச்சர், நாடுகடந்த மின்தொடர் கட்டமைப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவுடன், அது சேமிப்பை சார்ந்திருப்பதை நீக்கும், இது விலைமதிப்பற்றது மற்றும் 24 மணிநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தேவைப்படுகிறது என்றார். "ஓஎஸ்ஓஓஜியைப் பெற்றவுடன், யாரும் மின்சாரம் இல்லாமல் இருக்க வேண்டியதில்லை. இது உலகத்தை ஒன்றிணைத்து, மின்சார வசதி இல்லாத லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அணுகலை உறுதி செய்யும். நாம் அனைவரும் இதை முன்னோக்கி எடுத்துச் செல்வது அவசியம், இது உண்மையாக மாறும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் கூறினார்.

 

இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், தொழில்துறை, கல்வியாளர்கள், துறை வல்லுநர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல நிபுணர்கள் பங்கேற்றனர். 

 

(வெளியீட்டு ஐடி : 1955243)

***

AD/BS/KRS


(Release ID: 1955305) Visitor Counter : 167


Read this release in: Kannada , Urdu , English , Hindi