சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான பாதகமான தாக்கத்தைக் குறைக்க இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் சிறந்த மேலாண்மை குறித்த உறுதிப்பாட்டை திரு பூபேந்தர் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்
Posted On:
06 SEP 2023 2:44PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், செப்டம்பர் 04, 2023 அன்று இரசாயனங்கள் மற்றும் நிலைத்தன்மை - மாசு இல்லாத புவியை நோக்கிய மாற்றம் குறித்த 2-வது பெர்லின் அமைப்பின் கீழ் கூட்டப்பட்ட காணாலிக் காட்சி வாயிலான 'மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த உயர் மட்ட கலந்துரையாடலில்' பங்கேற்றார்.
இது தொடர்பாக ஒரு பொதுவான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் சிறந்த மேலாண்மை தொடர்பாக சர்வதேச விவகாரங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து உயர்மட்ட அரசியல் வழிகாட்டலுக்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு யாதவ், இரசாயன உற்பத்தித் துறையின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக இந்தியாவில், பல நாடுகள் எதிர்கொள்ளும் திறன் குறைபாடுகள் காரணமாக அவற்றின் பாதகமான விளைவுகளின் சாத்தியமான விளைவுகளையும் எடுத்துரைத்தார். பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 'மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை' மையமாகக் கொண்டு நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று திரு யாதவ் குறிப்பிட்டார்.
இரசாயனத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஒழுங்குமுறை சவால்களைத் தீர்ப்பதற்கும், கண்டுபிடிப்புகளை நிவர்த்தி செய்வதற்கும் வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு, இரசாயனங்களின் பதிவு, அங்கீகாரம், ஆபத்து வகைப்பாடு மற்றும் இரசாயனங்களை வெளியிடுதல் ஆகியவற்றிற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த செயல்முறை நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.
*****
ANU/AD/IR/KPG/KRS
(Release ID: 1955281)
Visitor Counter : 206