சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் என்.எச்.ஐ.டி.சி.எல் பிராந்திய அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார்
Posted On:
04 SEP 2023 4:11PM by PIB Chennai
ஆய்வு கூட்டத்தில் பேசிய திரு. நிதின் கட்கரி, “இது நமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், தளவாட செலவுகளைக் குறைப்பதற்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், பொது போக்குவரத்து இயக்கத்தின் சேவைகளை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்வதற்குமான புதுமையைத் தழுவுவதற்குமான ஆய்வு கூட்டம்” என்று கூறினார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தலைமையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் என்.எச்.ஐ.டி.சி.எல் ஆகியவற்றின் மண்டல அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு) கலந்து கொண்டார்.
செயலாளர் திரு அனுராக் ஜெயின், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், என்.எச்.ஐ.டி.சி.எல் நிர்வாக இயக்குநர் திரு மஹ்மூத் அகமது மற்றும் நாடு முழுவதிலுமிருந்து எம்.ஓ.ஆர்.டி.எச், என்.எச்.ஏ.ஐ மற்றும் என்.எச்.ஐ.டி.சி.எல் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஆர்.ஓ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிதி உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அதிக திட்டங்களை மேற்கொள்ளவும் உதவும் 'பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர்' (பிஓடி) மாதிரிகளின் திறனை திரு கட்கரி விரிவாக ஆராய்ந்தார். தொடர்ச்சியான தர கண்காணிப்பு மற்றும் நடந்து வரும் திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றியதிரு கட்கரி, இது நமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், தளவாட செலவுகளைக் குறைப்பதற்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், பொது போக்குவரத்து இயக்கத்தின் சேவைகளை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதற்கும் புதுமையைத் தழுவுவதாகும் என்றார்.
'தற்சார்பு இந்தியா' மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய நமது தேடலில், ஒரு முக்கியமான அம்சமாக தளவாட செலவுகளைக் குறைப்பதை அடைவது என்பது, சிறந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை உருவாக்குவது என்ற முன்னுரிமையாக மாறியுள்ளது என்று கூறினார்.
அனைத்து தரப்பினரிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். சிறப்பான பலன்கள் கிடைக்க நிதி தணிக்கையுடன் செயல்திறன் தணிக்கை மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.
நாள் முழுவதும் நடைபெறும் இந்த அமர்வில் சாலை பாதுகாப்பு, பல்வேறு முறைகளில் (பிஓடி, எச்ஏஎம், இபிசி), மலைப்பகுதிகளில் சாலைகளின் மேம்பாடு, நிலையான சாலைகளை உருவாக்குவது உள்ளிட்ட சாலைகளின் தரம், சாலை இயக்கம் மற்றும் பராமரிப்பு போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
**
ANU/SM/BS/KPG
(Release ID: 1954705)
Visitor Counter : 211