மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி முதல் தொழில்முனைவு வரை, மெட்டாவுடனான மூன்றாண்டு கூட்டாண்மையை திரு தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்: தலைமுறை மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்
Posted On:
04 SEP 2023 3:55PM by PIB Chennai
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புதுதில்லியில் கல்வி அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மெட்டா ஆகியவற்றுக்கு இடையே "தொழில்முனைவோருக்கு கல்வி: தலைமுறை மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்" என்ற 3 ஆண்டு கூட்டாண்மையை தொடங்கி வைத்தார்.
மெட்டா மற்றும் என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி, ஏ.ஐ.சி.டி.இ மற்றும் சி.பி.எஸ்.இ ஆகியவற்றுக்கு இடையே 3 ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கல்வி இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இந்தியாவை உலகின் திறன் தலைநகராக மாற்றுவதற்கும், நமது அமிர்த இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சி என்று கூறினார்.
'தொழில் முனைவோருக்கான கல்வி' என்பது மாற்றம் தரக்கூடிய கூட்டாண்மையாகும். இது டிஜிட்டல் திறனை அனைத்து தரப்பினரையும் சென்றடையச் செய்யும் என்று அவர் மேலும் கூறினார். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர்களை எதிர்கால தொழில்நுட்பங்களுடன் தடையின்றி இணைக்கும் மற்றும் நமது அமிர்த இளைஞர்களாகிய புதிய தலைமுறையின் சிக்கல்களை களைந்து தொழில்முனைவோராக மாற்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர், விரைவாக மாறிவரும் இந்த காலங்களில் நமது இளைஞர்களையும் தொழிலாளர்களையும் தயார்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் சூழலில் வெற்றி பெறுவதற்கும் முக்கிய பங்கு வகிப்பதற்கும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-----------
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1954650)
Visitor Counter : 156