பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் 2023 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேசிய ஆலோசனைப் பயிலரங்கம் நடைபெறுகிறது - . "மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகள்" அல்லது "மாற்றத்தின் முகவர்களாக" ஊராட்சிகள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்படும்

Posted On: 02 SEP 2023 6:23PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2023 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (என்.ஐ.ஆர்.டி அண்ட் பி.ஆர்) இரண்டு நாள் தேசிய ஆலோசனை பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

 

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுனில் குமார், உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவன தலைமை இயக்குநர் டாக்டர் ஜி.நரேந்திர குமார் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் ஆகியோர் தொடக்க அமர்வில் சிறப்புரையாற்றுகின்றனர்.

 

 

இந்தப் பயிலரங்கம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக அதிகாரிகள் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கள வல்லுநர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும். நாடு முழுவதிலுமிருந்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் இதில் பங்கேற்று,  வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தொலைநோக்குத் திட்டம் 2047-ஐ வகுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவார்கள்.

 

 

ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு,  "மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகள்" அல்லது "மாற்றத்தின் முகவர்களாக" ஊராட்சிகள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்படும்.

 

 

இந்த தேசிய ஆலோசனைப் பயிலரங்கம், 2030 ஆம் ஆண்டிற்குள் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இரண்டு நாள் தேசிய ஆலோசனைப் பயிலரங்கின்போது தெரிவிக்கப்படும் புதிய யோசனைகள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், பணி நெறிமுறைகளை மேம்படுத்தவும் உதவும்.

 

(Release ID: 1954379

 

***

SM/PLM/KRS



(Release ID: 1954404) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi