குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கிராமத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம்
Posted On:
02 SEP 2023 3:59PM by PIB Chennai
செப்டம்பர் 01, 2023 அன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற விநியோக விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) தலைவர் திரு மனோஜ் குமார் பங்கேற்று, கைவினைக் கலைஞர்களுக்கு கருவிகள் மற்றும் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கிராமத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் (கிராமயோக் விகாஸ் யோஜனா) ஒரு பகுதியாக 100 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்சார சக்கரங்களும், 75 தோல் கைவினைக் கலைஞர்களுக்கு காலணி இயந்திரக் கருவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புவனேஸ்வர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி அபராஜிதா சாரங்கி மற்றும் கிழக்கு மண்டல கே.வி.ஐ.சி உறுப்பினர் திரு மனோஜ் குமார் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி வளாகத்தில் கிராமோத்யோக் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கைவினைஞர் சம்மேளன கூட்டம் மற்றும் மண்பாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் கே.வி.ஐ.சி.யின் குறிப்பிடத்தக்க சாதனைகளை திருமதி அபராஜிதா சாரங்கி எடுத்துரைத்தார். தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் கே.வி.ஐ.சி தீவிரமாக பங்களித்து வருகிறது என்றும் கிராமப்புற இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) தலைவர் திரு. மனோஜ் குமார், கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தியாவின் தேசிய பாரம்பரியமான "காதி"யை பல்வேறு சர்வதேச தளங்களுக்கு உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். வறுமையை ஒழிப்பதற்கும், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், பெண்களுக்கு அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதற்கும், வேலையின்மையை நிவர்த்தி செய்வதற்கும் 'கதர்' ஒரு சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான கருவி என்பதை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறம்பட நிலைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கே.வி.ஐ.சி-யின் தயாரிப்புகள் முந்தைய நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 1.34 லட்சம் கோடிக்கு மேல் விற்பனை ஆகி இருப்பதாகவும், இது ஒரு வரலாற்று மைல்கல் சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.
***
SM/ANU/PLM/DL
(Release ID: 1954370)
Visitor Counter : 182