மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக் ஷ் லிக்கி இன்று கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஐ.சி.ஏ.ஆர்-சி.எம்.எஃப்.ஆர்.-ன் விழிஞம் பிராந்திய மைய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்
Posted On:
31 AUG 2023 5:45PM by PIB Chennai
மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக் ஷ் லிக்கி ஐ.சி.ஏ.ஆர்-சி.எம்.எஃப்.ஆர்.ஐ-விழிஞம் பிராந்திய மையத்தைப் பார்வையிட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள கடல் மீன் குஞ்சு பொரிப்பகத்தைப் பார்வையிட்ட அவர், விஞ்ஞானிகள் மற்றும் மீன் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் சில்வர் பாம்பனோவின் தேசிய குஞ்சு வளர்ப்பு வங்கி முதலியவற்றையும், சாகரிகா கடல் ஆராய்ச்சி மீன் காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை செயலாளர் பாராட்டினார். குறிப்பாக கடலோர நீரில் அதன் நிலையான உற்பத்திக்காக சிப்பி குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து அவர் எடுத்துரைத்தார். இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் குஞ்சு பொரிப்பகத்தால் உற்பத்தி செய்யப்படும் சிப்பிகளைக் கடலில் வளர்ப்பதன் மூலம் முத்துச் சிப்பிகளின் இயற்கை வாழ்விடங்களை மீட்டெடுத்து மேம்படுத்துவது வளப்பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு இடையே இணக்கமான சமநிலையை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
சாகரிகா கடல் ஆராய்ச்சி மீன் காட்சியகம் மற்றும் அலங்கார மீன் குஞ்சு பொரிப்பகம் ஆகியவற்றையும் பார்வையிட்ட செயலாளர், அங்குள்ள அலங்கார உயிரினங்களின் திறனை அறிய ஆர்வமாக இருந்தார். மீன் வளர்ப்போர் மற்றும் தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அலங்கார மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்த சி.எம்.எஃப்.ஆர்.ஐ.-ன் முயற்சிகளை பாராட்டினார். மேலும், மீன் வளர்ப்போர் மற்றும் தொழில் முனைவோருடன் கலந்துரையாடிய அவர், அலங்கார மீன் உற்பத்தி அலகுகளில் வளர்ப்பதற்கான அலங்கார மீன்குஞ்சுகளை வழங்கினார்.
கூண்டு மீன் வளர்ப்பு உள்ளிட்ட மீன்வளர்ப்பு, மீனவ சமூகங்களுக்கு ஒரு மாறுதல் வாழ்வாதாரமாக இருப்பதைக் கண்ட லிக்கி, நாடு முழுவதும் கடல் துடுப்பு மீன் மற்றும் மட்டி மீன் குஞ்சு பொரிப்பகங்களுக்கு நேரடி தீவனத்தை உறுதி செய்வதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வாகும் இது என்று குறிப்பிட்டார்.
சி.எம்.எஃப்.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், ஐ.சி.ஏ.ஆர்-சி.எம்.எஃப்.ஆர்.எல் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர் பி.சந்தோஷ் ஆகியோர் செயல்பாடுகளின் நிலையை மத்திய அரசின் செயலாளரிடம் விளக்கினர். நாட்டின் கடலோரப் பகுதிகளில் விதை உற்பத்தி மற்றும் சிப்பி, உண்ணக்கூடிய சிப்பி மற்றும் முத்து சிப்பிகளை வளர்ப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
***
ANU/SMB/DL
(Release ID: 1953889)
Visitor Counter : 88