வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நாட்டின் நகர்ப்புற நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அரசின் உறுதிப்பாட்டை திரு ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்

Posted On: 31 AUG 2023 5:41PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கான  அரசின்  முயற்சிகள் குறித்து பேசிய மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நகர்ப்புற துறையில் முதலீடுகள் 2004-ம் ஆண்டு 1,78,053 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு 18,07,101 கோடி ரூபாயாக கணிசமாக உயர்ந்துள்ளது  என்று கூறினார்.

.

"நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றியமைத்தல்" என்ற தலைப்பில் புதுப்பிக்கப்பட்ட மின் கையேட்டை (2014-2023) வெளியிட்டு அமைச்சர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இன்று அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்த கையேட்டில், இந்தியாவில் நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்கள், முன்முயற்சிகள், திட்டங்கள், இயக்கங்களின் முன்னேற்றம் குறித்த தரவுகள், தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம், பிரதமரின் வீட்டுவசதித்திட்டம்- நகர்ப்புறம், புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கான அடல் இயக்கம், பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி திட்டம் மற்றும் தீனதயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

 

இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு ஹர்தீப் சிங் பூரி, நகர்ப்புற மேம்பாடு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கருத்தை நினைவு கூர்ந்தார்.  "நகரமயமாக்கலை நாங்கள் ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறோம், மேலும் நகரங்களை உலகத்தரம் வாய்ந்த நகர்ப்புற இடங்களாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்ற பிரதமரின் கருத்தைக் குறிப்பிட்டார்.  தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கடந்த 9 ஆண்டுகளில் நகர்ப்புறத் துறையை மேம்படுத்துவதற்கான  வாய்ப்பை அரசு பயன்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இந்த துறை முன்னர் புறக்கணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 

***

AD/ANU/IR/RS/KPG



(Release ID: 1953877) Visitor Counter : 72


Read this release in: English , Urdu , Hindi , Telugu