மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைக்கான 2-வது தேசிய ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
29 AUG 2023 7:26PM by PIB Chennai
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் அமைக்கப்பட்ட கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்திற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார். இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா மற்றும் தேசிய ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
முதலாவது தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், இத்துறையில் தற்சார்புக்கு வழிவகுக்கும் கால்நடை, பால்பண்ணை, கோழி, செம்மறி ஆடு, பன்றி வளர்ப்பு, தீவனத் துறை போன்றவற்றில் இளைஞர்கள் மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்பை உருவாக்க உதவுவதற்கு அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.
கிராமப்புறங்களில் கோழி, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பால்யன் வலியுறுத்தினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில், கால்நடைத் துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று, இந்தக் குழுவின் நோக்கத்தை விளக்கினார். இக்கூட்டத்தில், கால்நடை வளர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
ஜூலை, 2022-ல் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனைக் குழு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம் தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தளமாக செயல்பட்டு வருகிறது. மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் தலைமையில் தேசிய ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் 28 அக்டோபர் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
Release ID: 1953320
AP/PLM/KRS
(रिलीज़ आईडी: 1953395)
आगंतुक पटल : 148