பாதுகாப்பு அமைச்சகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படையின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரதிநிதிகள் இந்தியக் கடற்படை மையங்களுக்கு வருகை
Posted On:
29 AUG 2023 12:17PM by PIB Chennai
கர்னல் டாக்டர் அலி சைஃப் அலி மெஹ்ராஸி தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படை நிபுணர் குழு கொச்சி, கோவா மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய கடற்படையின் சிறப்பு வானிலை, கடலியல் மற்றும் வானிலை மாதிரி பிரிவுகளுக்கு நான்கு நாள் பயணமாக ஆகஸ்ட் 27 அன்று இந்தியா வந்தது. வானிலையியல், கடலியல் மற்றும் வானிலை - பெருங்கடல் மாதிரியாக்கம் ஆகிய துறைகளில் தொழில்முறை அறிவு, நிபுணத்துவம், பயிற்சி மற்றும் ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை இந்தப் பயணம் அதிகரிக்கும்.
இந்தியக் கடற்படை, பல ஆண்டுகளாக வானிலையியல் மற்றும் கடலியல் துறையில் அறிவு, நிபுணத்துவம் மற்றும் திறன்களைப் பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் (ஐஓஆர்) உள்ள பல நாடுகளுக்கு கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிற்சி மற்றும் வானிலை முன்னறிவிப்பு சேவைகளை இந்தியக் கடற்படை வழங்கி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படைக்குழு 28 ஆகஸ்ட் 23 அன்று கொச்சிக்குப் பயணம் மேற்கொண்டது. அங்கு இந்திய கடற்படையின் தரவு செயலாக்கம் மற்றும் பகுப்பாய்வு மையத்தில் (என்ஓடிபிஏசி) இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழுவினர் சந்தித்தனர்.
***
(Release ID: 1953341)
Visitor Counter : 125