பாதுகாப்பு அமைச்சகம்

காசநோய் ஓழிப்புக்கான நி-க்ஷய் மித்ரா முன்முயற்சியின் ஒரு பகுதியாக 765 காசநோயாளிகளுக்கு இந்திய விமானப்படை நிதியுதவி

Posted On: 26 AUG 2023 6:28PM by PIB Chennai

சமூகத் தொண்டு தொடர்பாக பங்களிப்பை வழங்கும் இந்திய விமானப்படையின் முயற்சியின் ஒரு பகுதியாக, நி-க்ஷய் மித்ரா திட்டத்தில் தமது சேவையை வழங்குகிறது.  இந்த நி-க்ஷய் மித்ரா என்பது,  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இது 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து காசநோயை முற்றிலும் அகற்றும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் பிரதமரால் முதன்முதலில் தொடங்கப்பட்ட "நி-க்ஷய் மித்ரா" என்பது காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொழில் நிறுவனங்கள், பிற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் ஆதரவு வழங்கும் ஒரு முன்முயற்சியாகும்.  இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

இதன்     ஒரு பகுதியாக, 23.08.2023 அன்று தில்லியில் உள்ள சுகாதாரம் அமைச்சகத்தின் மத்திய காசநோய் பிரிவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏர் மார்ஷல் ஆர்.கே.ஆனந்த் தலைமையிலான விமானப்படை குழு, தன்னார்வ பங்களிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 46 லட்சத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் செயலாளர் திருமதி எல்.எஸ்.சாங்சனிடம் ஒப்படைத்தது. இந்த பங்களிப்பின் மூலம், தில்லியில் சிகிச்சை பெற்று வரும் 765 நோயாளிகளுக்கு ஆறு மாத காலத்திற்கு உதவ விமானப்படை உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளின்படி, அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், இந்த உதவித் திட்டம் செயல்படுத்தப்படும்.

---

Release ID: 1952513

ANU/SM/PLM/KRS



(Release ID: 1952550) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Marathi , Hindi