அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர்-சி.ஜி.சி.ஆர்.ஐயின் 73 வது நிறுவன தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டி.எஸ்.ஐ.ஆர் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி ஆற்றிய 20 வது ஆத்மா ராம் நினைவு சொற்பொழிவு
प्रविष्टि तिथि:
26 AUG 2023 4:29PM by PIB Chennai
கொல்கத்தாவின் சி.எஸ்.ஐ.ஆர்-சென்ட்ரல் கிளாஸ் மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.ஜி.சி.ஆர்.ஐ) ஒரு வாரம் ஒரு ஆய்வக திட்டம் 26.08.2023 அன்று 73வதுநிறுவன நிறுவன தின கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டி.எஸ்.ஐ.ஆர் செயலாளரும், சி.எஸ்.ஐ.ஆரின் தலைமை இயக்குநருமான முனைவர் (திருமதி) என்.கலைச்செல்வி ஆற்றிய 20ஆவது ஆத்மா ராம் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. "நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் எஸ் & டி வாய்ப்புகள்" என்ற தலைப்பில் அவர் பேசினார், அதில் அவர் தேசிய இயக்கத் திட்டங்களுடன் எஸ்.டி.ஜி.களுடன் சி.எஸ்.ஐ.ஆர் கருப்பொருள்களை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்; அவற்றை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அதை அடைவதற்கான முன்னோக்கிய பாதை குறித்து அவர் உரையாற்றினார். சி.எஸ்.ஐ.ஆர்-சி.ஜி.சி.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் எஸ்.கே.மிஸ்ரா பங்கேற்பாளர்களை வரவேற்றார், டாடா ஸ்டீல் துணைத் தலைவர் (தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு) டாக்டர் தேபஷிஸ் பட்டாச்சார்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர் கலைச்செல்வி ஆத்மா ராம் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆவணக்காப்பகத்தையும் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகம் வரலாற்று காலத்திலிருந்து பீங்கான்களின் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
ANU/SM/PKV/KRS
(Release ID 1952477)
(रिलीज़ आईडी: 1952523)
आगंतुक पटल : 182