பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது – இந்தியாவால் உலகை வழிநடத்த முடியும் என்பதை நிரூபிக்கும் நேரம் இது : மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 25 AUG 2023 6:24PM by PIB Chennai

இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தூரில் நடைபெற்ற மின்னணு ஆளுமை தொடர்பான 26-வது தேசிய மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இன்று (25.08.2023) உரையாற்றினார்.

 

 

இந்த ஆண்டு ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது என்று கூறிய அவர், சில நாட்களில் புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது என்றார்சர்வதேச சிறுதானிய ஆண்டும் இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டார். சர்வதேச யோகா தினமும் இந்தியா மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, சந்திரயான் -3 வெற்றி அடைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல், உலகை வழிநடத்த முடியும் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த காலத் தடைகளை உடைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக அவர் கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் பல நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

கொவிட் பாதிப்புக் காலத்தில், வாழ்க்கை ஸ்தம்பித்தபோதும், இந்திய அரசின் நிர்வாக இயந்திரத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஏனென்றால் ஏற்கனவே அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக அவர் கூறினார். 'குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம்' என்ற தாரக மந்திரத்தை பிரதமர் நமக்கு வழங்கி இருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

 

 

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்வலுவான குறை தீர்க்கும் நடைமுறைகளை இந்த அரசு செயல்படுத்துவதாகவும்  காலவரையறைக்குட்பட்ட தீர்வுக் கொள்கையைப் பின்பற்றி மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.  2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே அரசின் குறிக்கோள் என்றும், மின் ஆளுகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, இது நிறைவேற்றப்படும் என்றும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

***

Release ID=1952207

 

SM/ PLM /KRS


(Release ID: 1952317) Visitor Counter : 147


Read this release in: Telugu , English , Hindi , Urdu