நிதி அமைச்சகம்

குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் புதுமை செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது

Posted On: 25 AUG 2023 1:42PM by PIB Chennai

குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தில், (GIFT IFSC) இந்தியாவுக்குள் புதுமை செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தால் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை 14-08-2023 அன்று சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்தக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். முன்னணி முதலீட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், வரி நிறுவனங்கள் மற்றும் பிற வல்லுநர்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழு இருந்தது.

இந்திய புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் தற்போது இந்தியாவுக்கு வெளியில் உள்ள இந்தியப் புத்தொழில் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை இந்த பரிந்துரைகளில் அடங்கியுள்ளன. 

உலகளாவிய நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) மையமாக குஜராத் நிதித் தொழில்நுட்ப நகர சர்வதேச நிதி சேவைகள் மையத்தை (கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி) மாற்றுவதற்கான முக்கியமான தனது பரிந்துரையை குழு வழங்கியுள்ளது. மேலும் புதிய நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவனங்கள் கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி-யில் தங்கள் வணிகத்தை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சியில் சர்வதேச கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் இந்தக் பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அமைச்சக நிலையிலான ஆலோசனைகளை ஊக்குவிக்க உதவும் என்றும், 2024-25 க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைய பங்களிக்கும் என்றும் நம்புவதாக குழுவின் தலைவர் திரு. ஜி. பத்மநாபன் கூறினார்.  அறிக்கை தொடர்பாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக ஐ.எஃப்.எஸ்.சி.ஏ.வுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

***

SM/ANU/PLM/KRS

Release ID: 1952016



(Release ID: 1952255) Visitor Counter : 113


Read this release in: Urdu , Hindi , English , Gujarati