அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

லக்னோவில் உள்ள இந்திய நஞ்சுப்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் "பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு அதிகாரமளித்தல்" என்ற தலைப்பிலான ஒரு நாள் சிந்தனைப் பயிலரங்கு நிறைவுபெற்றது

Posted On: 25 AUG 2023 1:19PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும்  தொழில்கள் ஆராய்ச்சித் துறையின் சார்பில் பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ.களுக்கு அதிகாரமளித்தல் குறித்த சிந்தனைப் பயிலரங்கு லக்னோவில் உள்ள இந்திய நஞ்சுப்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆகஸ்ட் 24, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், தகவல் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்தும் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் இந்த ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்துவதன் மூலம், கல்வியாளர்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த சிந்தனைப் பயிலரங்கின் குறிக்கோளாகும். பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. விரிவான ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்குகிறது, எனவே எம்.எஸ்.எம்.இ துறையை வலுப்படுத்துவதிலும், வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஊக்குவிப்பதிலும், 'தற்சார்பு இந்தியா' என்ற நீண்டகால இலக்கை அடைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை முன்னெடுப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) தலைமை இயக்குநருமான டாக்டர் என்.கலைச்செல்வி, லக்னோவில் உள்ள இந்திய நச்சுயியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.ஐ.டி.ஆர்) இயக்குநர் டாக்டர் பாஸ்கர் நாராயண், பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத் தலைவர் டாக்டர் சுஜாதா சக்லனோபிஸ் ஆகியோர் சிந்தனைப் பயிலரங்கின் தொடக்க அமர்வில் பேசினர்.

தொடக்க விழாவில் பேசிய டாக்டர் என்.கலைச்செல்வி, எம்.எஸ்.எம்.இ.க்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு "தற்சார்பு இந்தியாவை" உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த உதவுவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

எம்.எஸ்.எம்.இ/ ஸ்டார்ட் அப்கள் / கண்டுபிடிப்பாளர்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தனர். அதைத் தொடர்ந்து அது குறித்த சுருக்கமான விளக்கக்காட்சி காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 'சம்வாத்' நிகழ்வின் போது, எம்.எஸ்.எம்.இ.க்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

 

***

SM/ANU/SMB/RS/KPG



(Release ID: 1952206) Visitor Counter : 111


Read this release in: Urdu , Telugu , English , Hindi