சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தொலை சட்டஉதவி 2.0 நாளை தொடக்கம்
Posted On:
24 AUG 2023 12:10PM by PIB Chennai
நீதிக்கான அணுகலை உறுதி செய்வதற்கான பிரிவு 39 ஏ இன் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ள நீதித் துறை அதன் தொலை சட்ட உதவி 2.0 நிகழ்ச்சியை நாளை, அதாவது ஆகஸ்ட் 25, 2023 அன்று புதுதில்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார். தொலைப் பேசி வழியாக 50 லட்சம் பேருக்கு சட்ட உதவி வழங்ஙகப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாமானிய குடிமக்களுக்கு வழக்குக்கு முந்தைய ஆலோசனைகளை வழங்குவதை நினைவுகூரும் வகையிலும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
சாமானிய குடிமக்கள் சட்ட ஆலோசனை, சட்ட உதவி மற்றும் சட்ட பிரதிநிதித்துவம் ஆகியவற்றை ஒரே பதிவு மற்றும் தொலை சட்ட உதவி மூலம் ஒரே வழிமுறை மூலம் பெற முடியும். இந்த நிகழ்ச்சியில், சட்டச் சேவை வழங்குவதை உறுதி செய்யும் முன்னணி செயல்பாட்டாளர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சில காட்சிப்படுத்தல்கள் / வெளியீடுகள் பின்வருமாறு:
-தொலைச் சட்ட உதவிகளின் ஐந்தாண்டு (2017-2022) பயணத்தை சித்தரிக்கும் "டெலி-லா" திரைப்படத்தின் காட்சி;
தொலைச் சட்ட உதவிச் சேவையைப் பெறுவதில் பயனாளிகளின்
அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும் "பயனாளிகளின் குரல்கள்" வெளியீடு.
2022 - 2023 ஆம் ஆண்டிற்கான (2023 - 2024, ஏப்ரல் முதல் ஜூன் வரை) பிராந்திய வாரியாக சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான தொழில்முனைவோர், குழு வழக்கறிஞர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்களை வழங்கும் "சாதனையாளர்கள் பட்டியல்" வெளியீடு.
***
AD/ANU/IR/RS/GK
(Release ID: 1951761)