மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை புதுதில்லியில் மத்தியக் கல்வியமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

Posted On: 23 AUG 2023 6:38PM by PIB Chennai

மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) இன்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் அமைச்சர் இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இந்தியா மீது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார். உலகளாவிய பொறுப்புகளை நிறைவேற்ற, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஒரு முழுமையான, தற்காலத்துக்கேற்ற  மற்றும் இந்தியப் பாரம்பரியத்துடன் கூடியக் கல்வியை வடிவமைப்பதில் இந்தக் கட்டமைப்பின் பங்கை அவர் எடுத்துரைத்தார். பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை வெளியிடுவது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய ஊக்கச்சக்தியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். அடுத்தக் கல்வியாண்டு முதல் புதியப் பாடப்புத்தகங்கள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

என்.சி.எஃப்-எஸ்.இ.யின் விரிவானத் தன்மை பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்தக் கட்டமைப்பு கல்வியாளர்களுக்கு அதிகாரமளிக்கிறது. மேலும் பள்ளிக் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவை என்.சி.எஃப்-எஸ்.இ.-யின் கீழ் புதுப்பிக்கப்படுகின்றன. பன்மொழித் திறமை, கணிதத்தில் கருத்தியல் புரிதல், அறிவியல் ஆய்வுக்கானத் திறன்கள் ஆகியவையும் புதிய வடிவத்தைப் பெறுகின்றன. பாடத்திட்டத்தின் பல்துறை அணுகுமுறை தனிநபர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான உறவுகள் குறித்து படிப்பதற்கு மாணவர்களை ஊக்குவிக்கிறது.

பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (என்.சி.எஃப்-எஸ்.இ) என்பது தேசிய கல்விக் கொள்கை 2020 (என்.இ.பி 2020) முன்மொழிந்தபடி பள்ளிக் கல்வியின் 5 + 3 + 3 + 4 என்ற  முறையிலானப் பாடத்திட்டக் கட்டமைப்பாகும். இந்த நான்கு நிலை பள்ளிக்கல்வி வடிவமைப்புக்கு ஏற்ப புதிய மற்றும் விரிவான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) உருவாக்க அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடிப்படை மற்றும் ஆயத்தக்கல்வி, நடுநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி ஆகிய நான்கு நிலைகளுக்கான முழு பாடத்திட்ட கட்டமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

*****

AP/ANU/PLM/RS/KRS


(Release ID: 1951516) Visitor Counter : 214


Read this release in: Odia , English , Urdu , Hindi , Telugu