மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத் துறையில் நார்வேயுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் திரு எல் முருகன் ஆகியோர் கொண்ட இந்திய உயர்மட்டக் குழு நார்வேவுக்கு பயணம்
प्रविष्टि तिथि:
23 AUG 2023 5:18PM by PIB Chennai
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் இந்தியாவுக்கும், நார்வேவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மீன்வளத் துறை இணைச் செயலாளர் திருமதி நீது குமாரி பிரசாத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு நார்வே சென்றுள்ளது.
நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்நுட்பம் குறித்த உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் இந்தக் குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர், உலகளாவிய நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில் துறை நிறுவனமான அக்வாஜென் நிறுவனத்துக்கு இந்தக் குழுவினர் சென்றனர். அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் அக்வாஜென் தலைமைச் செயல் அதிகாரி திரு நட் ரோஃப்லோவுடன் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினர். மீன்வளப் பொருட்களின் தரம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் இந்திய கண்காட்சியாளர்களின் முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா பாராட்டினார்.
மீன் பண்ணைத் தீர்வுகள், கூண்டுகள் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பக அமைப்புகளில் மற்றும் சால்மன் தொழில்துறைக்கான சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்ட ஸ்கேல்ஏக்யூ வழங்கும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து தூதுக்குழுவுக்கு விளக்கப்பட்டது. மீன்வளர்ப்பின் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த ஸ்கேல்ஏக்யூ பயன்படுத்தும் சில புதுமையான தொழில்நுட்பங்களின் நேரடி செயல்விளக்கத்தையும் கண்டது.இந்த பயணம் பயனுள்ளதாக இருந்தது. மீன்வளர்ப்பு துறையில் இந்தியாவுக்கும், நார்வேக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
*****
AP/ANU/PLM/RS/KRS
(Release ID: 1951435)
(रिलीज़ आईडी: 1951506)
आगंतुक पटल : 144