சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுகாதார ஆணையத்தின் 100 மைக்ரோசைட் திட்டத்தின் கீழ் முதலாவது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க மைக்ரோசைட் மிசோரமின் அய்சாலில் தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 23 AUG 2023 10:57AM by PIB Chennai

நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை (ஏபிடிஎம்) விரைவுபடுத்துவதற்காக 100 மைக்ரோசைட் (சிறுமையம்) திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.ஏ) அறிவித்தது. மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் நகரில்  முதலாவதாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் மைக்ரோசைட் எனப்படும் சிறுமையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அப்பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை நிறுவனங்களும்  ஏபிடிஎம்மின் கீழ்  இணைக்கப்பட்டு நோயாளிகளுக்கு டிஜிட்டல் சுகாதார சேவைகளை வழங்கும்.

இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய என்.ஹெச்.ஏ தலைமை செயல் அதிகாரி, ஏபிடிஎம்-மின் கீழ் 100 மைக்ரோசைட்  தொடங்கும் திட்டம் மிக முக்கியமான முன்முயற்சியாகும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மிசோரமின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் திருமதி பெட்ஸி ஜோதன்பாரி சைலோ, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது, உலகளாவிய தரத்தில் சுகாதார சேவை என்ற இலக்கை அடைய உதவும் என்று கூறினார். அய்சாலில் முதல் மைக்ரோசைட்டை செயல்படுத்த ஒரு செயலாக்க கூட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஏபிடிஎம் மைக்ரோசைட் என்பது  குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சேவையாகும். இதில்  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தனியார் சுகாதார சேவை நிறுவனங்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்த மைக்ரோசைட்டுகள் பெரும்பாலும் மாநிலங்களால் செயல்படுத்தப்படும், அதே நேரத்தில் நிதி ஆதாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த வழிகாட்டுதல் தேசிய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படும்.

மிசோரம் தவிர, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஏபிடிஎம் மைக்ரோசைட்டுகளை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அடுத்த சில வாரங்களில் இதுபோன்ற மேலும் பல மைக்ரோசைட்டுகள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபிடிஎம் திட்டத்தின் கீழ் 100 மைக்ரோசைட்டுகள் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை https://abdm.gov.in/microsites என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

****

AD/ANU/PLM/RS/GK


(Release ID: 1951338) Visitor Counter : 176