சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தில்லி எய்ம்ஸ்-ன் 48-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் உரை நிகழ்த்தினார்
எப்போதும் தேசத்தை முதன்மையாகக் கருதவேண்டும்: திரு ஜக்தீப் தன்கர்
நாடு மருத்துவர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது - சுகாதார சேவைகளை குறைந்த செலவில் வழங்க பாடுபட வேண்டும் : மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
21 AUG 2023 5:57PM by PIB Chennai
தேசத்தை எப்போதும் முதன்மையாகக் கருதவேண்டும் என்றும் நாம் அனைவரும் தேசத்திற்கு கடமைப்பட்டுள்ளவர்கள் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் 48-வது பட்டமளிப்பு விழாவில் குயடிரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சுகாதாரத்தில் சிறந்த சூழலை உருவாக்குவதற்காக எய்ம்ஸ் உறுதியுடன் செயல்படுவதாக அவர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கி ஆதரவளித்தது பெருமைக்குரிய விசயம் என்று கூறினார்.
சர்வதேச யோகா தினத்தை உலகம் ஏற்று கடைபிடிப்பதைக் குறிப்பிட்ட திரு தன்கர், உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா என்று கூறினார். இந்த யோகா தினக் கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். விரிவான சுகாதார தீர்வுகளுக்கு பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ நடைமுறைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசம் மருத்துவர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று கூறினார். சுகாதாரச் சேவைகளை குறைந்த செலவில் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எய்ம்ஸ் தனது 50-வது பட்டமளிப்பு விழாவை நடத்தும் என்று கூறிய அவர், அப்போது இந்த மதிப்புமிக்க நிறுவனத்தில் பயின்ற மருத்துவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
சுகாதாரமும் வளர்ச்சியின் ஒரு வடிவம் என்று கூறிய அவர், நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அந்த நாடு வளத்துடன் இருக்க முடியும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டு 48,000 ஆக இருந்த மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை தற்போது இருமடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு 1,07,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். சுகாதாரத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, நாட்டில் உள்ள 750 மாவட்டங்களில் ரூ.64,000 கோடி செலவில் சுகாதாரக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதாக திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
****
(Release ID: 1950839)
ANU/AD/PLM/KPG/KRS
(Release ID: 1950878)
Visitor Counter : 126