அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
5 ஜி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான மென்பொருள் தீர்வு
Posted On:
17 AUG 2023 3:35PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப தீர்வால் இப்போது 5ஜி கட்டமைப்புகள் பாதிப்பு தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். இதன் மூலம் கட்டமைப்பு செயலிழப்பு நேரத்தைக் குறைக்கலாம். எதிர்காலத்தில் 5 ஜி கட்டமைப்புகள் இன்றியமையாததாக இருக்கும் என்பதால் இது நாடு தழுவிய தகவல் தொடர்பை எளிதாக்க உதவும்.
தொழில்நுட்பத்தை எளிதாக, சோதிக்க உதவும் பல சமீபத்திய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் தொண்ணூறு சதவீதம் மென்பொருளில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டில் தாக்குதல் மேற்பரப்பு பல மடங்கு அதிகரிக்கப்படுகிறது மற்றும் நேரடியாக நிர்வகிக்க முடியாது. முழு சோதனை செயல்முறையையும் தொடர்ச்சியான கண்காணிப்பையும் தானியக்கமாக்குவது மட்டுமே ஒரே நிலையான தீர்வாகும்.
தற்போது பெரும்பாலான பாதிப்புகள் தாக்குதலுக்குப் பிறகு அடையாளம் காணப்படுகின்றன, இதனால் கட்டமைப்புக்கு சேதம் ஏற்படுவதுடன் மீட்பு செலவும் அதிகரிக்கிறது.
ஐ.ஐ.டி மெட்ராஸில் உள்ள ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் (எஸ்.என்.ஏ.சி.எஸ்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) ஆதரவுடன், அதன் தொழில் காப்பாக புத்தொழிலுடன் இணைந்து, 5ஜி கட்டமைப்பு செயல்பாடுகள் மற்றும் ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (ஆர்.ஏ.என்) மென்பொருளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு சோதனை தீர்வை உருவாக்கி வருகிறது.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1949909)
Visitor Counter : 133