மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் அபிலக்ஸ் லிகி ஒடிசாவின் கசல்யகங்காவில் உள்ள பூரியின் பெந்தகாட்டா கிராமம், ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.எஃப்.ஏ மற்றும் என்.எஃப்.எஃப்.பி.பி ஆகியவற்றை பார்வையிட்டார்

Posted On: 16 AUG 2023 5:22PM by PIB Chennai

மத்திய  மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஸ் லிகி, ஒடிசாவின்  பூரி மாவட்டத்தின் கடலோர கிராமமான பெந்தகட்டாவில் கடலோரப் பகுதியில் உள்ள மீனவ மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கான நீண்டகால திட்டங்களை வகுப்பதற்கும் சென்றார். பெந்தகட்டாவில், டாக்டர் லிகி ஆரம்ப மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவ மக்கள் மற்றும் மீனவப் பெண்களுடன் கலந்துரையாடி அவர்களின் சமூக-பொருளாதார நிலையை அறிந்து கொண்டார். அப்போது, வலைகள், படகுகள் மற்றும் டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட உதவிகள் குறித்து மீனவர்கள் எடுத்துரைத்தனர். மீன்  இறங்குதளம், சுகாதாரமான உலர் மீன் சந்தை உள்ளிட்ட கோரிக்கைகளை  மீனவர்கள் கோரினர். ஒடிசா மீன்வளத்துறை இயக்குநரிடம் மீனவர்களின் தேவையை ஆராய்ந்து மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் அரசு உதவிகளை வழங்குமாறு செயலர் அறிவுறுத்தினார். பிரதமரின் மத்ஸயா சம்பத திட்டத்தின் கீழ் பயனடைந்த பூரி மாவட்டத்தைச் சேர்ந்த மீன் விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

புவனேஸ்வரில் உள்ள .சி..ஆர்-சி..எஃப். மற்றும் என்.எஃப்.டி.பி - தேசிய நன்னீர் மீன் குஞ்சுகள் வங்கி (என்.எஃப்.எஃப்.பி.பிஆகியவற்றின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக டாக்டர் அபிலக்ஸ் லிகி .சி..ஆர்-மத்திய நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிறுவனம் (சி..எஃப்.) கசல்யகங்காவில் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஒடிசா மாநிலத்தில் பிரதமரின் மத்ஸயா சம்பதா திட்டங்களின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

 சி..எஃப். மற்றும் என்.எஃப்.எஃப்.எஃப்.பி.பி ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்த டாக்டர் லிகி, ஏற்றுமதியாளர்கள், முற்போக்கு விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மீன் உற்பத்தியாளர் அமைப்பு (எஃப்.எஃப்.பி.) உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

மின்னணு / அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கிசான் மேளாக்கள், வெளியீடுகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளிடையே வெகுஜன விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சி..எஃப். மற்றும் என்.எஃப்.எஃப்.பி.பி ஆகிய இரண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று செயலாளர் வலியுறுத்தினார்.  

***


(Release ID: 1949653) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu