பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அவசியம்: சுதந்திர தின உரையில் பிரதமர்

प्रविष्टि तिथि: 15 AUG 2023 2:04PM by PIB Chennai

இன்று 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு அவசியம் என்பதையும் விளக்கினார்.  சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்டுள்ளது என்று இந்தியா இன்று பெருமையுடன் கூற முடியும் என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். சந்திரயான் திட்டத்தை பெண் விஞ்ஞானிகளும் வழிநடத்துகிறார்கள் என்று பிரதமர் மேலும் கூறினார்.

ஜி 20 இல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பிரச்சினையை முன்னெடுத்துள்ளதாகவும், ஜி 20 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

'நாரி சம்மான்' பற்றிப் பேசிய பிரதமர், தமது வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், அங்கு அந்த நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் இந்தியாவில் உள்ள பெண்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிக்கிறார்களா என்று கேட்டார். இன்று நமது நாட்டில் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) படிப்பில் சிறுவர்களை விட மாணவிகள் அதிகமாக உள்ளனர் என்றும், இன்று உலகம் நமது இந்த திறனை உற்று நோக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

 

***

PKV/DL


(रिलीज़ आईडी: 1949055) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali