பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா அடைந்த மாபெரும் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய 77-வது சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 15 AUG 2023 12:09PM by PIB Chennai

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள செங்கோட்டை கொத்தளத்திலிருந்து  நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, தொழில்நுட்பத்துறையில்  நாடு மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்தார்  டிஜிட்டல் ரீதியில் வலுவடைந்துள்ள  இந்தியாவின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

  1. இந்தியாவின் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம்  பற்றி, பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது உரையில் எடுத்துரைத்தார்.  நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் இணையதள வசதியைக் கொண்டுவருவதற்கு  மேற்கொள்ளப்பட்ட  விரைந்த முயற்சிகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.  டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில்  ஒவ்வொரு கிராமத்திற்கும் இணைய  வசதி சென்றடைந்துள்ளது.
  2. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இணையத் தரவு கட்டண விகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த நாட்களைக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் மிக மலிவு விலையிலான இணையத் தரவு விகிதங்களை இந்தியா பெருமையாகக் கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்துடன் அதை ஒப்பிட்டார். இந்த செலவு குறைப்பு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
  3. 5 ஜி அறிமுகம் செய்வதை நோக்கிய நாட்டின் விரைவான முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த அறிமுகம் அதிவேகமானதாக இருப்பதுடன் 700 க்கும் அதிகமான மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்றார்.
  4. மேலும், 6 ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுவதற்கான லட்சிய இலக்கையும் பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.  இந்த முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைப்பது குறித்தும் அவர் பேசினார்.

----

ANU/AP/SMB/KPG/DL


(Release ID: 1948882) Visitor Counter : 178