விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர தின கொண்டாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் தேசிய தலைநகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிட்டனர்

Posted On: 14 AUG 2023 5:06PM by PIB Chennai

77-வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதிலுமிருந்து சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து கொண்டாட்டங்களை தேசம் காணவுள்ளது. பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுவதைக் காணவும், நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் உரையைக் கேட்கவும் இந்த விருந்தினர்கள் தலைநகருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 15, 2023 அன்று தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா, 2023 ஐக் காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 மீனவர்களும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் மீனவ சமூகத்தின் பங்களிப்பை கௌரவிக்கவும் அங்கீகரிக்கவும் இது ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும்.

இந்தக் குழு இன்று தேசிய போர் நினைவுச்சின்னம், பிரதமர் அருங்காட்சியகம்இந்தியா கேட் ஆகியவற்றைப் பார்வையிட்டது. சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளிலிருந்து அழைக்கப்பட்ட சுமார் 1,800 பேர் இந்தக் குழுவின் ஒரு பகுதியாகும். 'மக்கள் பங்கேற்பு ' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த கன்னையா லால் சோலங்கி என்ற மீனவர் , "சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். சுதந்திரத்திற்குப் பின்னர், எந்தப் பிரதமரும் தில்லியில் சுதந்திர தினத்தைக் கொண்டாட மீனவர்களை அழைக்கவில்லை. பிரதமர் திரு. நரேந்திர மோடி எங்களுக்கு மரியாதை அளித்துள்ளார். மோடி  அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்’’ என்று கூறினார்.

ANU/SM/PKV/KRS

 

***


(Release ID: 1948728) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Manipuri