பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஐந்தாவது மண்டல கருத்தரங்கம் குவஹாத்தியில் நடைபெற்றது

Posted On: 12 AUG 2023 3:47PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த ஐந்தாவது ஒரு நாள் மண்டல கருத்தரங்கம் குவஹாத்தியில் இன்று (12-08-2023)  நடைபெற்றது. அசாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் குழந்தைகள் நலக் குழுக்கள், இளைஞர் நீதி வாரியங்கள், கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 1200 பேர் கலந்து கொண்டனர். குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் நடத்தப்படும் மண்டல கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் சத்தா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் திரு பிரியங்க் கனோங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய், குழந்தைகள் நலன்களைக் கருத்தில் கொண்டு சிறார் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

**************  

ANU/SM/PLM/DL



(Release ID: 1948192) Visitor Counter : 121