பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் வல்சுராவில் ஐந்தாவது செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு 2023 ஆகஸ்ட் 09 முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது

प्रविष्टि तिथि: 12 AUG 2023 3:55PM by PIB Chennai

கடற்படைக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த மூன்று நாள் பயிலரங்கு ஜாம்நகரில் உள்ள ஐஎன்எஸ் வல்சுரா கடற்படை பயிற்சித் தளத்தில் 2023 ஆகஸ்ட் 09-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் கடற்படை உயர் அதிகாரி வி.ஏ.எம்.ஏ.ஹம்பிஹோளி சிறப்புரையாற்றினார். தனது தலைமை உரையில், இத்துறையில் இந்திய கடற்படை எடுத்துள்ள முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் கடற்படைக்கு அதன் தேவைகளையும் அவர் விளக்கினார்.

 

இந்த பயிலரங்கில் நாடு முழுவதும் உள்ள முப்படைகளின் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐ.என்.எஸ். வல்சுரா-வின் கமாண்டிங் அதிகாரி நிறைவுரையாற்றினார். ஐந்தாவது செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 

**************  

ANU/AP/PLM/DL


(रिलीज़ आईडी: 1948184) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी