வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சரஸ் அஜீவிகா விற்பனை நிலையத்தில் டிபிஐஐடி மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் இணைந்து 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' ஓடிஓபி சுவரைத் தொடங்கியுள்ளன

Posted On: 12 AUG 2023 10:52AM by PIB Chennai

இந்தியாவின் உள்நாட்டு கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) கீழ் செயல்படுத்தப்படும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ஓடிஓபி) திட்டத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் இணைந்து செயல்படுகிறது. 

 

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் மற்றும் டிபிஐஐடி இயக்குநர் திருமதி சுப்ரியா தேவஸ்தலி ஆகியோர் நேற்று (11-08-2023) புதுதில்லியில் சரஸ் ஆஜீவிகா விற்பனை நிலையத்தில் ஓடிஓபி சுவரை திறந்து வைத்தனர். சரஸ் ஆஜீவிகா விற்பனை நிலையத்தில் உள்ள ஓடிஓபி சுவர் (ODOP Wall) இந்த இரண்டு முக்கிய அமைச்சகங்களுக்கு இடையிலான இணக்கமான கூட்டு செயல்பாட்டின் அடையாளமாக உள்ளது.

 

சரஸ் ஆஜீவிகா என்பது இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீனதயாள் அந்தியோதயா திட்ட முன்முயற்சி ஆகும். சரஸ் ஆஜீவிகா, மகளிர் கைவினைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

**************  

ANU/AP/PLM/DL



(Release ID: 1948118) Visitor Counter : 140