பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவி கணிசமாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல்

Posted On: 11 AUG 2023 4:49PM by PIB Chennai

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஆகஸ்ட் 11, 2023 அன்று, தேச சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களில் நிதி உதவியை கணிசமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தார். அதிகரித்த நிதி உதவி ஏற்பாடுகள் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் தியாகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அங்கீகரித்ததற்கு சான்றாக உள்ளது.  அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் உண்மையான விருப்பம்.

பின்வரும் மேம்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

தொழிற்பயிற்சி மானியம்: மறைந்த முன்னாள் படைவீரர்களின் மனைவியருக்கான  தொழிற்பயிற்சி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்சார்பு மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய பாதைகளை உருவாக்க உதவுவதன் மூலம், மறைந்த துணிச்சலான வீரர்களின் மனைவியரை ஆதரிப்பதற்கும் அதிகாரமளிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த மேம்பட்ட சரிசெய்தல் பிரதிபலிக்கிறது.

மருத்துவ மானியம்: ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் / அவர்களின் மனைவிகள்  இப்போது உயர்த்தப்பட்ட மருத்துவ மானியத்தைப் பெறுவார்கள், இந்த்த் தொகை ரூ.30,000 லிருந்து ரூ .50,000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி உதவி அதிகரிப்பு நமது ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் செய்த மதிப்புமிக்க பங்களிப்புகள் மற்றும் விரிவான மருத்துவ உதவிக்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்கிறது, அவர்கள் செயலில் இருந்து விலகிய பின்னரும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்கிறது.

தீவிர நோய் மானியம்: ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான  தீவிர நோய் மானியம் ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நமது முன்னாள் படைவீரர்களுக்கு முக்கியமான சுகாதார சவால்களின் போது உதவுவதற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது, தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி காட்டுகிறது.

தற்போது இந்த திட்டங்கள் கேந்திரிய சைனிக் வாரியத்தால் நடத்தப்படுகின்றன. ஆயுதப்படை கொடி நாள் நிதியிலிருந்து நிதியளிக்கப்படுகின்றன. இந்த திருத்தியமைக்கப்பட்ட நிதி உதவித் தொகைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து, பயனாளிகள் தேவையற்ற தாமதங்கள் இல்லாமல் அதிகரித்த உதவியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மூலம் நிர்வகிக்கப்படும். இந்த உயர்வுகள் இந்த திசையில் ஒரு படியாகும், ஏனெனில் நாட்டிற்கு மரியாதையுடனும் வீரத்துடனும் சேவை செய்தவர்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகளை அரசு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

***

(Release ID: 1947786)

AD/ANU/PKV/KRS


(Release ID: 1947970) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi