குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நமது மூவர்ணக் கொடி நமது பெருமையைப் பிரதிபலிக்கிறது: குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
प्रविष्टि तिथि:
11 AUG 2023 3:30PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இருந்து ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லந்தோறும் தேசியக் கொடி தொடர்பான இரு சக்கர வாகனப் பேரணியை குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது மூவர்ணக் கொடி நமது பெருமை என்று கூறினார்.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். அனைவரும் பெருமைமிக்க இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும், எப்போதும் தேசத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு துறையிலும் இந்தியா அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட திரு. ஜக்தீப் தன்கர், 2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் வகையில் நமது இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த இருசக்கர வாகனப் பேரணியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக கலாச்சார அமைச்சகத்தின் முயற்சிகளையும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.
***
AD/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1947936)
आगंतुक पटल : 162