சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
11 AUG 2023 2:11PM by PIB Chennai
தேசிய மக்கள்தொகைக் கொள்கை -2000 மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கை -2017 ஆகியவற்றின் கோட்பாடுகளின்படி, தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
அரசு எடுத்த நடவடிக்கைகள்:
- விரிவாக்கப்பட்ட கருத்தடை விருப்பத்தேர்வுகள்: ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசரகால கருத்தடை மாத்திரைகள், கருப்பை கருத்தடை சாதனம் (ஐ.யூ.சி.டி) மற்றும் கருத்தடை ஆகியவற்றை உள்ளடக்கிய தற்போதைய கருத்தடை முறைகள் மற்றும் புதிய கருத்தடை நடைமுறைகளான ஊசி மூலமான நடைமுறைகளும் ஊக்குவிக்கப்படுகிறது.
- கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்க மிஷன் பரிவார் விகாஸ் திட்டம் பதின்மூன்று மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
- கருத்தடை செய்துகொள்வதற்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஊதிய இழப்பு வழங்கப்படுகிறது.
- பிரசவத்திற்குப் பிந்தைய கருத்தடை சாதனம் (பிபிஐயுசிடி), கருக்கலைப்பிற்குப் பிந்தைய கருப்பை கருத்தடை சாதனம் (பிஏயுசிடி) மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய கருத்தடை (பிபிஎஸ்) ஆகிய நடைமுறைகளும் செயல்படுத்தப்படுகிறது.
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சேவை வழங்கல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் 'உலக மக்கள் தொகை தினம் மற்றும் வாஸெக்டோமி இருவார நிகழ்ச்சிகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- வீட்டுக்கே கருத்தடை சாதனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கருத்தடை சாதனங்களை வழங்குகின்றனர்.
- அனைத்து நிலை சுகாதார நிலையங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக குடும்பக் கட்டுப்பாட்டு மேலாண்மை தகவல் அமைப்பு (எஃப்.பி-எல்.எம்.ஐ.எஸ்) நடைமுறையில் உள்ளது.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றி கண்டுள்ளதுடன், பின்வரும் முன்னேற்றங்களும் அடையப்பட்டுள்ளது.
- மொத்த கருவுறுதல் விகிதம் 2015-16 ஆம் ஆண்டில் 2.2 ஆக இருந்தது 2019-21 ஆம் ஆண்டில் 2.0 ஆக குறைந்துள்ளது.
- 2015-16 ஆம் ஆண்டில் 47.8 சதவீதமாக இருந்தநவீன கருத்தடை பயன்பாடு 2019-21 ஆம் ஆண்டில் 56.5 சதவீதமாக உயர்ந்துள்ளது
- 2015-16 ஆம் ஆண்டில் 12.9 சதவீதமாக இருந்த குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளாதவர்களின் விகிதம் 2019-21ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக குறைந்துள்ளது.
- கடந்த 2015-ம் ஆண்டு 20.8 ஆக இருந்தபிறப்பு விகிதம்2020-ம் ஆண்டில் 19.5 ஆக குறைந்துள்ளது.
மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.சிங் பாகெல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1947918)
Visitor Counter : 215