கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடலோர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
தமிழ்நாட்டில் 13 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
Posted On:
11 AUG 2023 4:02PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தால் நாடு முழுவதும் கடலோர வளர்ச்சித் திட்டங்கள் அடையாளம் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்களை நவீனப்படுத்துதல், சுற்றுலா படகுத்துறைகள் அமைத்தல், துறைமுகங்களுக்கு போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், கடலோர கப்பல் போக்குவரத்தை குறைந்த செலவு கொண்ட போக்குவரத்து முறையாக ஊக்குவிப்பதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடலோரப் பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கப்படும். சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.10,960 கோடி மதிப்புள்ள 171 திட்டங்களுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிதியளித்துள்ளது.
171 திட்டங்களில் ரூ.3,310 கோடி மதிப்பிலான 53 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 118 திட்டங்கள் ரூ. 7,660 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்த வரை சாகர்மாலாத் திட்டத்தின் கீழ், கடலோர உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 13 திட்டங்கள் 950 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1947917)