சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல்

Posted On: 10 AUG 2023 5:07PM by PIB Chennai

நீதிமன்றப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது என்பது அந்தந்த உயர் நீதிமன்றங்கள் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நிர்வாக விசயமாகும். இதில் அரசுக்கு நேரடிப் பங்கு இல்லை. -நீதிமன்ற இயக்கமுறைத் திட்டம் என்பது நாட்டின் மாவட்ட / சார்பு நீதிமன்றங்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயல்பாட்டிற்கான ஒரு தேசிய மின் ஆளுமைத் திட்டமாகும். இது நீதிமன்ற செயல்முறைகளை விரைவுபடுத்துவதன் மூலமும், வழக்குகளின் நிலை, உத்தரவுகள் / தீர்ப்புகள் பற்றிய வெளிப்படையான தகவல்களை இணையதளத்தில்  வழங்குவதன் மூலமும் வழக்குகளை விரைவாக முடிக்க உதவுகிறது.

 

நீதித்துறை மற்றும் வழக்கு தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு. -நீதிமன்றங்கள் கட்டம் 1 (2011-15) நீதிமன்றங்களின் அடிப்படை கணினிமயமாக்கல் மற்றும் உள்ளூர் நெட்வொர்க் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. திட்டத்தின் இரண்டாம் கட்டம் (2015-23) குடிமக்களை மையமாகக் கொண்ட மின்-சேவைகளில் கவனம் செலுத்தியது. மேலும் 18735 நீதிமன்றங்களை கணினிமயமாக்கியது மற்றும் அவற்றை பரந்த பகுதி நெட்வொர்க்குடன் (வான்) இணைத்தது. பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது ஈகோர்ட் திட்ட கட்டம் 2 இன் ஒரு பகுதியாக இல்லை.

 

இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்தல், சேமித்தல், மீட்டெடுத்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நீதித்துறையின் பாரம்பரிய தரவுகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான டிஜிட்டல் பாதுகாப்பு நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) தயாரிக்க இந்திய உச்ச நீதிமன்றத்தின் -குழுவால்  ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டது. அக்டோபர் 21, 2022 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் -குழுவின் முழு கூட்டத்தில் எஸ்ஓபிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவேடுகள் இணையதளம் மூலம் கிடைப்பதற்கு ஏதுவாக, நீதித் துறை, மின்னணு ஆணையத்துடன் ஒருங்கிணைந்து, மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக பின்வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:

18,735 மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்கள் மின்னணு நீதிமன்றங்களின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளில் என்ஐசி-ஆல் உருவாக்கப்பட்ட மின் நீதிமன்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் வழக்கு தகவல் மென்பொருள்.

தீர்ப்புகளின் நகல்களை இலவசமாக வழங்குவதற்காக தீர்ப்பு தேடல் போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.

23.58 கோடி வழக்குகளையும், 22.56 கோடிக்கும் அதிகமான உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளையும் அணுக அனுமதிக்கும் எலாஸ்டிக் தேடல் தொழில்நுட்பத்துடன் என்.ஜே.டி.ஜி உருவாக்கப்பட்டது. தாமத காரணங்கள் சேர்க்கப்பட்டு 01.08.2023 நிலவரப்படி திறந்த ஏபிஐக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு (என்.ஜே.டி.ஜி) என்பது நாட்டின் உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் இருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வழக்கு பதிவுகளின் விளைவாக வழக்கு புள்ளிவிவரங்களின் ஆன்லைன் களஞ்சியமாகும். இது நாட்டின் கணினிமயமாக்கப்பட்ட நீதிமன்றங்களின் நீதித்துறை நடவடிக்கைகள் / முடிவுகள் தொடர்பான தகவல்களை வழங்குகிறது. ஏறக்குறைய 3,000 நீதிமன்ற வளாகங்கள் தாக்கல் செய்தல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், ஆட்சேபனைகள், வழக்கு நிலை, காரணப் பட்டியல், தீர்ப்பு மற்றும் உத்தரவுகளின் நேரடித் தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் பிரதிபலிக்கின்றன. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான வழக்கு தரவுகள் என்.ஜே.டி.ஜி.யில் கிடைக்கின்றன.

நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் காணவும், நிர்வகிக்கவும், குறைக்கவும் என்.ஜே.டி.ஜி ஒரு கண்காணிப்பு கருவியாக செயல்படுகிறது. வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு சரியான நேரத்தில் உள்ளீடுகளை வழங்கவும், வழக்கு நிலுவையைக் குறைக்கவும் இது உதவுகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய தரவு பகிர்வு மற்றும் அணுகல் கொள்கைக்கு (என்.டி.எஸ்..பி) இணங்க, துறை ரீதியான ஐடி மற்றும் அணுகல் விசையைப் பயன்படுத்தி என்.ஜே.டி.ஜி தரவை எளிதாக அணுக அனுமதிக்கும் வகையில் திறந்த பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) மத்திய மற்றும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தாமதத்திற்கான காரணங்கள் என்.ஜே.டி.ஜி.யில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

AD/SMB/KRS



(Release ID: 1947609) Visitor Counter : 107


Read this release in: English , Urdu