நிலக்கரி அமைச்சகம்
சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அனல்மின் அலகுகள் மற்றும் சுரங்கங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது
Posted On:
09 AUG 2023 8:51PM by PIB Chennai
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.ஐ.எல்) அனல்மின் அலகுகள் மற்றும் சுரங்கங்கள் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஐஎஸ்ஓ:14001 க்கான சான்றிதழைப் பெற்றுள்ளன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யும் வகையில், தேவையான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, இது அண்மையில் 30.06.2023 அன்று மேற்கொள்ளப்பட்டது, இதில் அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி (இசி) நிபந்தனைகளின்படி, நீர் மாதிரிகளின் மூன்றாம் தரப்பு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துக் கழிவு அளவீடுகளும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளன.
என்.எல்.சி.ஐ.எல் இயக்கும் அனைத்து மின் நிலையங்களாலும் ஏற்படும் ஒருங்கிணைந்த விளைவுகள் குறித்த விரிவான ஆய்வு 2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.இ.டி) கீழ் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (ஈ.ஐ.ஏ) அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து அனல் மின் நிலையங்கள், சுரங்கங்கள், நகரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நீர் மேலாண்மை ஆய்வு 2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மையம் (அண்ணாமலை பல்கலைக்கழகம் -என்.ஏ.பி.இ.டி.யின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பு) மேற்கொண்டது. இந்த அறிக்கை அனைத்து கழிவுநீர் மற்றும் கழிவு சுத்திகரிப்பு வசதிகளையும் பகுப்பாய்வு செய்து, அனைத்து நீர் அளவுருக்களும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் சிசி/ சிபிசிபி/ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொண்டு வரும் அனைத்து நிபந்தனைகளுக்கும் என்எல்சிஐஎல் இணங்குகிறது.
சுற்றுப்புறத்தில் காற்று மற்றும் நீரின் தர அளவுருக்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் என்.எல்.சி.ஐ.எல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
******
SM/SMB/KRS
(Release ID: 1947269)
Visitor Counter : 157