ரெயில்வே அமைச்சகம்

ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகள்

Posted On: 09 AUG 2023 4:35PM by PIB Chennai

பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

31.05.2023 வரை 6427 நிலையங்களில் பாயிண்டுகள் மற்றும் சமிக்ஞைகளின் மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டுடன்  மின் / மின்னணு இண்டர்லாக்கிங் அமைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 31.05.2023 வரை 11093 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் செய்யப்பட்டுள்ளது.

31.05.2023 வரை 6377 ரயில் நிலையங்களில் மின் சாதனங்கள் மூலம் தண்டவாள ஆக்கிரமிப்பை சரிபார்ப்பதற்காக முழுமையான தட சுற்றுவட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களின் விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக அனைத்து ரயில் என்ஜின்களிலும் விழிப்புக் கட்டுப்பாட்டு  சாதனங்கள் (வி.சி.டி) பொருத்தப்பட்டுள்ளன.

மூடுபனி காரணமாக பார்வைத்திறன் குறைவாக இருக்கும்போது சிக்னல் குறித்து ஊழியர்களை எச்சரிப்பதற்காக மின்மயமாக்கப்பட்ட பகுதிகளில் சமிக்ஞைகளுக்கு முன்பு இரண்டு ஓஹெச்இ கம்பங்களில்   ரெட்ரோ-ரிஃப்ளெக்டிவ் சிக்மா பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மூடுபனியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஜி.பி.எஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனம் (எஃப்.எஸ்.டி) வழங்கப்படுகிறது, இது சிக்னல்கள், லெவல் கிராசிங் வாயில்கள் போன்ற நெருங்கும் அடையாளங்களின் தூரத்தை அறிய உதவுகிறது.

பாதுகாப்பான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து ஊழியர்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பணியிடப் பாதுகாப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கைகள் போன்ற பாதையின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்த விரிவான வழிமுறைகள். வழங்கப்பட்டுள்ளன.

 

பாதுகாப்பான ரயில் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், நாடு முழுவதும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்கும் ரயில்வே சொத்துக்களில் (பெட்டிகள் மற்றும் வேகன்கள்) விபத்துத் தடுப்பு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கமான .சி.எஃப் வடிவமைப்பு பெட்டிகளுக்கு பதிலாக எல்.எச்.பி வடிவமைப்பு பெட்டிகள் செய்யப்படுகின்றன.

2019 ஜனவரி மாதத்திற்குள் அகல ரயில் பாதையில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராஸிங்குகளும் (யுஎம்எல்சி) அகற்றப்பட்டுள்ளன.

இரயில்வே பாலங்களின் பாதுகாப்பை தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த ஆய்வுகளின் போது மதிப்பிடப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் பாலங்களின் பழுதுபார்த்தல் / புனரமைத்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய ரயில்வே அனைத்து பெட்டிகளிலும் பரவலான பயணிகளின் தகவல்களுக்காக சட்டரீதியான "தீத் தடுப்பு  அறிவிப்புகளை" காட்சிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், எச்சரிக்கவும் தீயணைப்பு சுவரொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தீப்பற்றக்கூடிய பொருட்கள், வெடிபொருட்கள், ரயில் பெட்டிகளுக்குள் புகை பிடிக்க தடை, அபராதம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

******

 



(Release ID: 1947261) Visitor Counter : 85


Read this release in: English , Urdu , Telugu