பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளின் இலக்குகளை அடைதல்

Posted On: 09 AUG 2023 4:02PM by PIB Chennai

அங்கன்வாடி சேவைகளின் கீழ், (i) துணை ஊட்டச்சத்தை உள்ளடக்கிய ஆறு அத்தியாவசிய சேவைகளின் தொகுப்பு; (ii) நோய்த்தடுப்பு; (iii) உடல்நலப் பரிசோதனை; (iv) பரிந்துரை சேவைகள்; (v) முன்பள்ளி முறைசாராக் கல்வி;  (vi) நாடு முழுவதிலும் உள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வடகிழக்கு மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களில் உள்ள வளரிளம் பெண்கள் (14-18 வயது) ஆகியோருக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி திட்டத்தின் கீழ் 75.58 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள், 46.87 லட்சம் பாலூட்டும் தாய்மார்கள், 0 முதல் 6 மாதம் வரையிலான 40.87 லட்சம் குழந்தைகள், 6 மாதம் முதல் 3 வயது வரையிலான 4.19 கோடி குழந்தைகள், 6 மாதம் முதல் 3 வயது வரை 4.19 கோடி குழந்தைகள், 3 வயது முதல் 2 வயது வரை 4.29 கோடி குழந்தைகள் என மொத்தம் 10.3 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். ஓராண்டில் 300 நாட்களுக்கு ஊட்டச்சத்து விதிமுறைகளின்படி துணை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

3 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (.சி.சி.) வழங்கப்படுகிறது, இது அங்கன்வாடி சேவைகளின் கீழ் ஆறு சேவைகளில் ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கை (என்..பி) 2020-ன் பரிந்துரைகளை அடைய, தரமான குழந்தைப்  பருவ வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்காக, விளையாட்டு அடிப்படையிலான, செயல்பாட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தலைப் பயன்படுத்தும் ஒரு புதிய திட்டமான 'போஷன் பி பதாய் பி' (ஊட்டச்சத்துடன் கல்வி) தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

(Release ID: 1947048)

SMB/KRS


(Release ID: 1947260)
Read this release in: English , Urdu , Hindi , Telugu