சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமான பணியில் விரைவு மற்றும் தரத்தில் மாற்றம்
Posted On:
09 AUG 2023 3:30PM by PIB Chennai
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சகத்தால் கட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் ஆண்டு வாரியான தொலைவு 2013-14-ம் நிதியாண்டில் கட்டப்பட்ட தொலைவை விட அதிகமாகும். ஆண்டு வாரியாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் பொருட்கள் மற்றும் செயல்முறைகள் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, மேம்பட்ட வலிமை மற்றும் ஆயுட்காலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் (என்.எச்) கட்டுமானத்தின் சிறந்த தரத்திற்காக பல விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சில எடுத்துக்காட்டுகள் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட பிட்டுமென் / மாற்றியமைக்கப்பட்ட பிட்டுமென், கான்கிரீட் & எஃகின் மேம்பட்ட வலிமை, உயர் செயல்திறன் கொண்டஃபைபர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் போன்றவை.
செப்டம்பர், 2015 இல் "பசுமை நெடுஞ்சாலைகள் கொள்கையை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, 64 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இணைப்பு
கட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் ஆண்டு வாரியான விவரங்கள் பின்வருமாறு:
ஆண்டு
|
கட்டப்பட்ட நீளம் (கி.மீ)*
|
2013-14
|
4,300
|
2018-19
|
10,900
|
2019-20
|
10,200
|
2020-21
|
13,300
|
2021-22
|
10,500
|
2022-23
|
10,300
|
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1947231)